Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 67 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? தீயாக பரவும் தகவல்

thalapathy67 movie music director update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இந்த படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் அவர்களை ரசிகர்கள் தற்போது வரை கலாய்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். ‌

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். மாஸ்டர் மற்றும் விக்ரம் கூட்டணியை போல இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்துக்கு தமன் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்திற்கும் இவர்தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

thalapathy67 movie music director update
thalapathy67 movie music director update