Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது” – நடிகர் பகவதி பெருமாள்

Small-Budget Filmmakers Have a Huge Responsibility – Actor Bagavathi Perumal

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் பகவதி பெருமாள் கலந்துகொண்டு பேசுகையில், “சினிமாவில் 100 பேர் வெற்றி பெற்றால், லட்சம் பேர் காணாமல் போகிறார்கள். நல்ல படங்கள் வெளியாகி வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளர்கள்தான் முக்கிய காரணம்.

அந்த வகையில், ‘மொதராத்திரி’ படத்தின் கதையைத் தேர்வு செய்து தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. சிறிய பட்ஜெட்டில் திரைப்படங்களை உருவாக்குபவர்களுக்குத்தான் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை உணர்ந்து தற்போது பல நல்ல படங்கள் வெளியாகி வருகின்றன” என்றார்.