Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வருத்தத்தில் மீனா. ஸ்ருதி எடுத்த முடிவு. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka aasai serial episode update 16-10-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா ஸ்ருதியை பார்க்க வந்த நிலையில் எப்ப கல்யாணம் பண்ணிக்க போறீங்க என்று கேட்க இன்னும் இரண்டு நாளைக்குள்ள என்று சொன்னதும் எப்படி இந்த வீட்டை விட்டு வெளியே வரப்போற என்று கேட்கிறார். ஸ்ருதி அதான் தெரியல என்று சொன்னதும் சீதா கையில் வைத்திருக்கும் கல்யாண பத்திரிக்கை வைத்து திடீரென்று ஒரு ஐடியா தோன்றி உனக்கு கல்யாணம்னு சொல்லி கண்டிப்பா வரணும்னு இன்வைட் பண்ணிட்டு போ என சொல்ல சீதாவும் அப்படியே செய்கிறார்.

மறுபக்கம் முத்து சவாரிக்கு ஊருக்கு கிளம்ப மீனா வருத்தத்தோடு அவரை வழி அனுப்பி வைக்க முத்துவும் உன்னை விட்டு எப்படி இருக்க போறன்னு தெரியல என ஃபீலிங்குடன் கிளம்பி செல்கிறார்.

இதைத் தொடர்ந்து சீதா ரவியை சந்தித்து சுருதி குறித்து கூறுகிறார். ஸ்ருதிக்கு நான் கையெழுத்து போட்டுடுவேன் உனக்கு யார் போடுவா என்று கேட்க ரவி நான் ஒரு முக்கியமான ஆள கூட்டிட்டு வரேன் நீங்க பூக்கட்டுற கோவில்லையே கல்யாணத்தை வச்சுக்கலாம் அதுக்கான ஏற்பாடுகள் மட்டும் நீ பண்ணிடு, உங்க அம்மாவை எப்படியாவது அன்னைக்கு மட்டும் கடைக்கு வராமல் செய் என சொல்ல முதலில் தயங்கும் சீதா பிறகு சரி என ஒத்துக் கொள்கிறார்.

இங்கே ஸ்ருதி டின்னர் சாப்பிட வந்து உட்கார்ந்து இரண்டு நாள் கழித்து என் பிரண்டோட கல்யாணத்துக்கு போகப் போறேன் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் மெசேஜ் இல்ல விஷ் பண்ணா போதும் என ஷாக் கொடுக்கின்றனர். ஸ்ருதி எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் அவர்கள் அனுமதி கொடுக்க மறுக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து ரூமுக்குள் வந்த ஸ்ருதி பிஜுவுக்கு போன் போட்டு என் பிரண்டோட கல்யாணத்துக்கு போக போறேன் நீயும் என் கூட வா, அவ உன்னை பார்க்கணும்னு சொன்னா என்று சொல்ல பிஜூவும் ஓகே சொல்கிறார்.

முத்து மீனாவுக்கு போன் போட்டு உன் சாப்பாடு சாப்பிட்டு எனக்கு வெளியில சாப்பிடுவது பிடிக்கல, கார்ல தான் படுத்து தூங்க போறேன் என்று சொல்ல அதை எல்லாம் கேட்டு மீனா வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது

sirakadikka aasai serial episode update 16-10-23
sirakadikka aasai serial episode update 16-10-23