Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனோஜ் சொன்ன வார்த்தை, மீனா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragdikkaaasai serial episode update 12-09-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து வந்தவுடன் க்ரிஷ் சந்தோஷமாக பேசி சிரிக்கிறார் பிறகு மகேஸ்வரி என்ன நடந்தது என்று கேட்க அவங்க கிட்ட பேசி இருக்கோம் அவங்க நாளைக்கு ஸ்கூல்ல வந்து கிரிஷ்க்கு டெஸ்ட் வைக்கிறேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார் பிறகு மீனா கஷ்டப்பட்டு என்னைக்கெல்லாம் வெயில்ல நின்னுட்டு வந்து இருக்கோம் கொஞ்சம் கொடுக்க தண்ணி கொடுங்க என்று சொல்ல மகேஸ்வரி எழுந்துக்கும் போது உடனே உட்கார்ந்து விடுகிறார் அங்க இருக்க தண்ணி எடுத்துக்கோங்க என்று சொல்ல மீனா வேண்டா வேணா சொல்லி விடுகிறார்.

நம்ம வீட்டுக்கு போகலாமா என முத்து கேட்க கொஞ்ச நேரம் யோசித்த கிரிஷ் போகலாம் என சந்தோஷமாக சொல்லுகிறார். உடனே ரோகினி அதிர்ச்சியாக கொஞ்ச நேரத்தில் அவர்கள் கிளம்பி விடுகின்றனர். மகேஸ்வரி உடனே வந்து கதவை சாத்த மீனா கடுப்பாகிறார். பிறகு ரோகிணி வந்தவுடன் மகேஸ்வரி, நீ எதுக்காக இப்படி பண்ணிக்கிட்டு இருக்க உன்னோட ஹேண்ட் பேக் கூட உன்னால எடுத்துட்டு போக முடியாதா அவங்க என்ன என்ன நினைச்சிருப்பாங்க என்று கோபப்படுகிறார் அவங்க உன்ன என்ன நினைச்சிருப்பாங்கன்றத விட நான் மாட்டி இருக்க கூடாது அதுதான் முக்கியம் என ரோகினி சொல்லுகிறார்.

மறுபக்கம் ரோகினி ரூமில் இருக்க மனோஜ் வந்தவுடன் இன்னைக்கு ஏன் ரோகினி ஷோரூம் வரவில்லை என்று கேட்கிறார் முக்கியமான ஒரு கிளையன்ட் பாக்க போயிருந்தேன் என்று சொல்ல எனக்கு ஷோரூம்ல முக்கியமான ஒரு விஷயம் நடந்தது அந்த போர்டிங் ஸ்கூலோட மேனேஜர் அன்னைக்கு டிவி வாங்கிட்டு போனாரு இல்ல அதுக்காக காசு கொடுக்க வந்திருந்தாரு. அப்போதான் அவர் எனக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொன்னார் என்று சொல்ல என்ன விஷயம் என்று ரோகினி கேட்கிறார் அது நான் எல்லாருக்கும் கிட்டயும் சொல்றேன் ஹாலுக்கு அழைத்து வந்து எல்லோரையும் கூப்பிடுகிறார் பிறகு போர்டிங் ஸ்கூல் மேனேஜர் க்ரிஷ் புகைப்படத்தை காட்டி இந்தப் பையன் ஒரு கூட படிக்கிற பையன் அடிச்சதாகவும் இப்போ அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க போறதாகவும் சொல்ல விஜயா விளையும் பயிர் முலையில் தெரியும் இன்று வழக்கம் போல் கிருஷ் திட்டுகிறார்.

பிறகு அண்ணாமலை முத்துவிடம் என்ன நடந்தது என்று கேட்க மீனா அவங்க வீட்டுக்கு போய் பேசிய விஷயத்தையும் கிரிஷ்க்கு டெஸ்ட் வைக்க போகும் விஷயத்தையும் சொல்லுகின்றனர் பிறகு மனோஜ் இது மாதிரி பசங்கள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போட்டா தான் சரிப்பட்டு வருவாங்க என்று சொல்ல முத்து முறைத்துப் பார்க்கிறார். உடனே அந்தப் பையன் இவங்க கூட இருக்காங்க இல்ல அதுதான் இவன மாதிரி கோபப்பட்டு ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கா, இவனும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குப் போனவன் தானே என்று மனோஜ் சொல்ல உடனே கோபப்பட்ட முத்து மனோஜ் சட்டையை பிடித்து நான் ரவுடியா என்று முறைத்து கேட்க பிறகு குடும்பத்தினர் வந்து விலகி விடுகின்றனர்.

உடனே அண்ணாமலை மனோஜ் அறைந்துவிட விஜயா இப்ப எதுக்கு அவன் அடிக்கிறீங்க என்று கேட்க வர விஜயாவையும் அண்ணாமலை மிரட்டுகிறார். பிறகு முத்துவிடம் அண்ணாமலை என்ன சொல்லுகிறார்? மீனா என்ன கேட்கிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragdikkaaasai serial episode update 12-09-25
siragdikkaaasai serial episode update 12-09-25