siragadikkaaasai serial episode update 23-03-26
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க அப்போது ஒரு திருட்டு பெண்மணி அவரது தாளியை திருடி கொண்டு சென்று விடுகிறார் உடனே தாலி காணாமல் போனதால் சீதா பதறிப் போயிருக்க அந்த பெண்மணி மீனாவை இடித்துவிட்டு செல்கிறார். உடனே சீதா வந்து மீனாவிடம் அழுது தாலி காணாமல் போன விஷயத்தை சொல்ல மீனா அவருக்கு அந்த பெண்மணி மேல் சந்தேகம் வந்து பின்னாலே துரத்திக் கொண்டு ஓடுகிறார். வேகமாக ஓடி ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை பிடித்த மீனா தாலி செயினை கொடு என்று இழுக்க அப்போது முக்காடு விலகி அவரது முகத்தை பார்த்து விடுகிறார் அப்போதுதான் அது விஜயா சாமியாராக கூப்பிட்டு வந்த பெண்மணி என தெரியவந்து விடுகிறது.
மீனா அவளை பிடிக்கப் போராட அப்போது அந்தப் பெண்ணின் பர்ஸ் கீழே விழுந்து விடுகிறது ஆனால் முதலில் மீனா கவனிக்காமல் இருந்து விடுகிறார் மறுபக்கம் பூஜைக்கு வந்த நபர்கள் சொல்லிவிட்டு கிளம்ப மீனா எங்கே என்று முத்து கேட்கிறார் அப்போது சீதாவும் மீனாவும் வர சீதா அழுது கொண்டு இருக்க என்ன ஆச்சு என்று முத்து கேட்கிறார். தாலி காணாமல் போன விஷயத்தை சொல்ல யாரு இப்படி பண்ணி இருப்பாங்க என்று கேட்கிறார் எனக்கு யாருன்னு தெரியும் என்று மீனா சொல்ல உடனே விஜயா திருடி சாகவாசம் வேற இருக்கா என்று கேட்கிறார். அவங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க மீனா சொல்ல அனைவரும் யாராக இருக்கும் என்று யோசிக்கின்றனர்
பிறகு அண்ணாமலை யாருமா என்று கேட்க நம்ம வீட்டுக்கு சாமியாரா வந்து பொம்பள தான் அவ என்று சொன்ன விஜயா அவர்கள் எல்லாம் சொல்லாத அவங்க பெரிய சாமியார் என்று சொல்லுகிறார். உடனே அண்ணாமலை நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா என்று கேட்கிறார் முத்து நிஜமாவே நீ பார்த்தியா அவங்கதானா என்று கேட்டேன் நான் உங்களை தொரத்திட்டு போனதுக்கு அப்புறம் அவங்களோட முகத்தை பார்த்தேன் நீதானே அன்னைக்கு சாமியாரா வந்தான்னு கேட்டா அப்போ என்ன தள்ளி விட்டுட்டு ஓடிப்போயிட்டா என்று சொல்லுகிறார் உடனே விஜயாவும் மனோஜும் கண்டிப்பாக அவங்க இருக்காது என்று உறுதியாக சொல்லுகின்றனர் இது மட்டும் இல்லாமல் இவ திரும்பவும் வீட்டுக்கு வர அந்த பிளான் போட்டுக்கிட்டு இருக்கா என்று சொல்லுகின்றனர் இதனை கேட்ட முத்து அவளுக்கு ஒன்னும் அப்படி வரணும்னு அவசியம் கிடையாது அப்பா வந்து கூப்பிட்டாரு நான் வந்து கூப்பிட்டா அவ அப்பவே வந்திருப்பா அப்பாவோட உசுருக்காக தான் அந்த மாதிரி வராம இருந்தா என்று சொல்லுகிறார் முத்து,மீனா சொல்லியும் விஜயா நம்பாமல் இருக்க சுருதி இந்த மாதிரி மூடநம்பிக்கைல இருக்கிறவங்க எல்லாம் நேரடியா நிரூபிச்சா தான் நம்புவாங்க என்று சொல்ல முத்துவும் பலகுரல் சொல்றதுதான் சரி நான் ஆதாரத்தோடு நிரூபிச்சா மீனாவ அந்த வீட்டுக்கு ஆரத்தி எடுத்து வர வைப்பீங்களா என்று கேட்க என்ன சவால் விடுகிறாரா என்று கேட்கிறார் என்று சொல்ல எதுவா இருந்தாலும் நடக்கட்டும் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
அண்ணாமலை முத்துவிடம் நம்ம வீட்டு உன்னோட தாலிச்சேன் காணாம போயிருக்கு. நீதான் கண்டுபிடிக்கணும் என்று சொல்லுகிறார் மறுபக்கம் சீதா வீட்டுக்கு சென்றவுடன் அருண் கோபமாக பேசுகிறார் வழக்கம் போல் முத்துவை திட்டி பேசிய அவர் அவ கூப்பிட்டாலும் நீ போயிருக்க அப்படி இருந்தா என்னையும் தானே கூப்பிட்டு இருக்கணும் என்று சொல்ல நீங்க கூப்பிட்டாலும் வர மாட்டீங்க அதனால தான் சொல்லல என்று சொல்லுகிறார் அப்ப எனக்கு மரியாதை இல்லாத இடத்தில் நீ போனினா நாளைக்கு என்னென்ன நினைப்பாங்க போனதும் இல்லாம தாலிய தொலைச்சிட்டு வந்து இருக்க அந்த ஃபங்ஷனுக்கு போனவங்க எல்லாரோட தாலியுமா காணாமல் போச்சு உன்னோட தாலி மட்டும் தான போச்சு என்று சொன்ன எங்க அக்காவும் மாமாவும் கண்டுபிடிச்சு தரதா சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார் உங்க அக்காவும் மாமாவும் என்ன போலீஸா என்று சொல்லுகிறார் நீங்க ஆறுதலா சொல்லுவிங்கனு பாத்தா இப்படி பேசுறீங்க என்று சொன்ன அது எங்க அம்மாவோட தாலி கலந்திருக்கு எங்க அம்மாவும் இல்லை இப்ப எங்க அம்மாவோட தாலியும் இல்ல இந்த வீட்டை விட்டு நீ வெளியே போ என்று சொல்ல இதுக்காக இப்படி சொல்லுவீங்களா என்று கேட்க அருண் சீதாவை அறைந்து வீட்டை விட்டு வெளியே போக சொல்லுகிறார்.
மீனா முத்துவை அந்த பெண்மணி தள்ளிவிட்ட இடத்திற்கு அழைத்து வந்து பார்க்கிறார் அப்போது அங்கே ஒரு சிசிடிவி கேமரா இருக்கிறது அதில் பார்த்தபோது முகம் சரியா தெரியல ஆனா அந்த லேடி மாதிரி தான் இருக்கு என்று சொல்லுகிறார். பர்ஸ் விழுவதை கவனித்த முத்து அந்த அம்மாவோட பசங்க தான் விழுந்திருக்கு அதை எடுத்து பார்த்தால் ஏதாவது ஆதாரம் கிடைக்கும் என்று முடிவு எடுத்து பரிசை எடுத்துப் பார்க்கின்றனர் அப்போது அதில் ஒரு அட்ரஸ் இருக்கிறது. இருவரும் அந்த அட்ரசுக்கு போய் பார்த்தால் தெரியும் என்று முடிவு எடுத்து செல்கின்றனர். அப்போது என்ன நடக்கிறது? அது யாருடைய வீடு? எப்படிப்பட்ட இடம்? முத்து மீனா என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…