வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கிய நிலையில், தற்போது சென்னை நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட திறந்தவெளி செட் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் வடசென்னை பகுதி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, ராஜன் கதாபாத்திரத்தில் அமீரும், சந்திரா கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியாவும் பங்கேற்க உள்ளனர்.
மேலும், இன்னும் 3 மாதங்களில் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் என கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வருகிற நவம்பர் 6-ஆம் தேதி திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிம்புவின் திரைப்பயணத்தில் இதுவரை உருவாகியுள்ள படங்களில் மிகவும் பிரம்மாண்டமான படைப்பாக ‘அரசன்’ அமையும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

