Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கணவர் முன்னிலையில் சமந்தாவுக்கு “ஐ லவ் யூ” சொன்ன ரசிகர்… விழாவில் பரபரப்பு!

Fan says “I Love You” to Samantha in front of her husband!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்திய அளவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள சமந்தா, தற்போது நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இயக்குநர் ராஜ்நிதி மோருவை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அவர், தற்போது பல புதிய முயற்சிகளில் பிஸியாக உள்ளார்.

சமந்தா தயாரித்து நடித்துள்ள ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தின் விழாவில் சமந்தாவும், அவரது கணவர் ராஜ்நிதி மோருவும் மேடையில் அமர்ந்திருந்தனர்.

அப்போது திடீரென மேடைக்கு அருகே வந்த ரசிகர் ஒருவர், சமந்தாவுக்கு பூங்கொத்து கொடுத்து “ஐ லவ் யூ” என கூறினார். இதை கேட்டு சமந்தா ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தார். ரசிகரின் இந்த செயல் நிகழ்ச்சியில் இருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் சமந்தா, ரசிகரிடமிருந்து பூக்களை பெற்றுக்கொண்டு அவருடன் செல்பி எடுத்தார். அருகில் இருந்த அவரது கணவர் ராஜ்நிதி மோரு, இந்த சம்பவத்தை சிரித்தபடியே கவனித்துக் கொண்டிருந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.