சிக்கந்தர் தோல்வி.. ஏ.ஆர்.முருகதாஸை குறை சொன்ன ராஷ்மினா

சிக்கந்தர் தோல்வி.. ஏ.ஆர்.முருகதாஸை குறை சொன்ன ராஷ்மினா

கோலிவுட் கடந்து பாலிவுட்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் கலவையான விமர்னங்களை பெற்றது.

இந்நிலையில் ஏ.ஆர்.முரு​க​தாஸ் இயக்கத்​தில் சல்மான்கான் நடித்த இந்தி படம், ‘சிக்கந்தர்’. ராஷ்மிகா மந்​தனா நாயகி​யாக நடித்​தார். சத்​ய​ராஜ், சர்​மான் ஜோஷி உள்பட பலர் நடித்​த இப்படம் கடந்த வருடம் வெளி​யானது. மிக​வும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரூ.200 கோடி பட்​ஜெட்​டில் உருவாகி, வணி​கரீ​தி​யாகத் தோல்​வியைத் தழுவியது.

இப்படத்​தின் தோல்விக்கு சல்மான்கான் படப்​பிடிப்​புக்​குத் தாமதமாக வந்ததும் காரணம் என ஏ.ஆர்​.​முரு​க​தாஸ் கூறியிருந்​தார். அதற்கு சல்​மான் கான் பதிலடி கொடுத்திருந்​தார்.

இந்​நிலை​யில், ராஷ்மிகா மந்​தனா தெரிவிக்கையில், ‘சிக்கந்​தர் கதை பற்றி முருக​தாஸ் சாருடன் பேசி​யது நினைவிருக்கிறது. அந்தக்கதை உண்​மை​யில் முற்​றி​லும் சுவாரஸ்​ய​மாக​வும் மாறு​பட்​ட​தாக​வும் இருந்​தது. பிறகு படப்​பிடிப்​பில் நடந்தவை வித்​தி​யாச​மாக இருந்​தன.

பொது​வாக சில படங்களில் அப்​படித்​தான் நடக்​கும். ஒரு கதையைக் கேட்கும்​போது, அது ஒன்​றாக இருக்​கும். திரைப்​பட​மாக உரு​வாகும் கால​கட்​டத்​தில், நடிகர்​களின் நடிப்​புக்கு ஏற்ப, படத்​தொகுப்​புக்கு ஏற்ப, பல விஷ​ங்கள் மாறும். அது சினிமா​வில் சகஜம்தான். ‘சிக்​கந்​தர்’ படத்​தி​லும் அது நடந்தது’ என கூறியுள்​ளார்​.

Sikander’s failure.. Rashmina criticized A.R. Murugadoss

dinesh kumar

Recent Posts

எளிமை மாறாதவர்..! – கார்த்தி குறித்து நெகிழ்ந்த சர்தார் 2 நாயகி ஆஷிகா ரங்கநாத்!

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…

24 hours ago

சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி – ‘மண்டாடி’ படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…

24 hours ago

இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்யக் கோரிக்கை – டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ மனு!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…

24 hours ago

சர்தார் 2 திரை விமர்சனம்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…

1 day ago

மண்டாடி திரை விமர்சனம்

ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…

1 day ago

Higher Promo Song

Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…

1 day ago