Dhanush Responds to National Award Controversy
72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
‘மகாராஜா’, ‘வாழை’, ‘மெய்யழகன்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், ‘ராயன்’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதனிடையே ‘தங்கலான்’ படத்திற்காக கடுமையாக உழைத்த நடிகர் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்காததும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதனால் ‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து வந்தன. இதுகுறித்து தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு பெரியபாளையம் அருகே ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தனுஷ் கலந்துகொண்டார். அப்போது தேசிய விருது சர்ச்சை குறித்து அவர் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “ராயனுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ராயன் வெளியான வருடத்தில் பல நல்ல படங்கள் வெளியாகின. அந்தப் படங்களின் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதை நான் மதிக்கிறேன். ‘புதுப்பேட்டை’, ‘வடசென்னை’, ‘மயக்கம் என்ன’, ‘மரியான்’ போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் கிடைக்கவில்லை. ராயன் திரைப்படத்துக்கு தேசிய விருது தானாக கிடைத்தது. தமிழனாக எனக்கு மேலும் 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. தட்டிவிடாமல் என்னை தட்டிக் கொடுங்கள்” என தெரிவித்துள்ளார்.
தனுஷின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…