Sivakarthikeyan Praises Soori’s Hard Work!
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இப்படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஷ் மற்றும் ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியையும், அவர்களுக்குள் நடைபெறும் பாரம்பரிய படகுப் போட்டியையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
படம் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் ‘மண்டாடி’ படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயனும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மண்டாடி’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும், சூரியின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தளராத அர்ப்பணிப்புக்கு இது கிடைத்துள்ள உண்மையான பலன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “நல்ல கதை எப்போதும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இந்த மாபெரும் வெற்றிக்கு என் அன்பு அண்ணனுக்கும், ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
Great reports for #Mandaadi 💥💥🔥🔥👏👏👍👍@sooriofficial annan’s hard work, persistence and relentless dedication have truly paid off. Good content always wins big! Congrats, my dear annan, and the entire team, on the blockbuster success 🤗❤️
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 10, 2026
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…