எளிமை மாறாதவர்..! – கார்த்தி குறித்து நெகிழ்ந்த சர்தார் 2 நாயகி ஆஷிகா ரங்கநாத்!

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், தெலுங்கில் உருவாகியுள்ள ‘விஸ்வம்பரா’ படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கார்த்தியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய ஆஷிகா ரங்கநாத், கார்த்திக்கு சினிமா மீது மிகுந்த ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கூட மிகக் கச்சிதமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கார்த்தி மிகவும் எளிமையாகவும், பணிவாகவும் இருப்பது எனக்கு மிகவும் பிடித்தது” என ஆஷிகா ரங்கநாத் தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவியுடன் நடித்த அனுபவம் குறித்தும் பேசிய அவர், சிறு வயது முதலே சிரஞ்சீவியின் பாடல்களைக் கேட்டு, அவரது நடனங்களை ரசித்து வளர்ந்ததாகக் கூறியுள்ளார். தற்போது அவருடன் இணைந்து நடிப்பது பெருமையாக இருப்பதாகவும், படப்பிடிப்புத் தளத்தில் சிரஞ்சீவி பகிர்ந்துகொள்ளும் அனுபவங்கள் தனக்கு மிகுந்த உத்வேகம் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘விஸ்வம்பரா’ படப்பிடிப்பின்போது நடிகை திரிஷாவை சந்தித்ததாகவும், அவர் மிகவும் அழகாக இருப்பதாகவும் ஆஷிகா ரங்கநாத் தெரிவித்துள்ளார்.

Suresh

Recent Posts

Asku Macha Lyrical Video

Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…

41 minutes ago

Bloody Politics Official Teaser

Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…

46 minutes ago

PAAVAI Official Trailer

PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh

52 minutes ago

DHEIVAA Taster

DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan

56 minutes ago

Centimeter Lyric Video

Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…

1 hour ago

Kalla Nikkiriye Lyric Video

Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…

1 hour ago