அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு தொடங்கும் தேதி மாற்றம்!

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் புதிய திரைப்படம் ‘டேர் டெவில்’. இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவை அடுத்த மாதம் 2-ஆம் தேதி எளிமையாக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

மேலும், அதே நாளில் படப்பிடிப்பையும் தொடங்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, அடுத்த மாதம் 13 அல்லது 16-ஆம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டப் படப்பிடிப்பில் அஜித்குமார் மற்றும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீலீலா பங்கேற்கும் காட்சிகளைப் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தை அஜித்குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமார், தனது ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து அஜித் – ஆதிக் கூட்டணி மீண்டும் இணைவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Suresh

Recent Posts

Family Boy Teaser

Family Boy Teaser | Mithun Manickam | Anugraha | M.Sukumar | Anitha Sampath | Saran…

1 day ago

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா குறித்து அவதூறு.. சைபர் கிரைம் காவல் துறையில் புகார்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் அவதூறுகள்…

1 day ago

மலையாள இயக்குநருடன் மீண்டும் கைகோர்க்கும் ஜீவா

நடிகர் ஜீவா தனது அடுத்த திரைப்படத்திற்காக மலையாள இயக்குநர் முகமது முஸ்தஃபாவுடன் கைகோர்த்துள்ளார். தற்காலிகமாக ‘ஜீவா 49’ எனப் பெயரிடப்பட்டுள்ள…

1 day ago

‘ஓம்’ படத்தில் சாய் பல்லவி கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் மற்றும் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் நடிகை சாய்…

1 day ago

14 ஆண்டுகால காதல்.. திருமண பந்தத்தில் இணைந்த அஞ்சனா அர்ஜுன் – இசயா நட்டர்!

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன், தனது 14 ஆண்டுகால காதலரான இசயா நட்டரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது…

1 day ago

Mangala Vanname Video Song

Mangala Vanname Video Song | Ramayana | Namit M, Nitesh T | AR Rahman, Abhay…

3 days ago