மலையாள இயக்குநருடன் மீண்டும் கைகோர்க்கும் ஜீவா

நடிகர் ஜீவா தனது அடுத்த திரைப்படத்திற்காக மலையாள இயக்குநர் முகமது முஸ்தஃபாவுடன் கைகோர்த்துள்ளார். தற்காலிகமாக ‘ஜீவா 49’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தொடக்க விழா நேற்று பூஜையுடன் நடைபெற்றது.

இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடிகைகள் நிமிஷா சஜயன் மற்றும் ‘வாழை 2’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஏஞ்சல் மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவா மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுதன் சுந்தரம் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கி இயக்குநராக மாறிய முகமது முஸ்தஃபா, தனது முதல் படமான ‘கப்பேலா’ மூலம் கேரள மாநில அரசின் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதைப் பெற்றார். அண்மையில் சூரஜ் வெஞ்சாரமூடு மற்றும் ஹிருது ஹாரூன் நடிப்பில் வெளியான கேங்ஸ்டர் திரைப்படமான ‘முரா’ படத்தையும் இவர் இயக்கியிருந்தார்.

முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மலையாள இயக்குநர் நிதீஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் கவனம் ஈர்த்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு மலையாள இயக்குநருடன் ஜீவா இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suresh

Recent Posts

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு தொடங்கும் தேதி மாற்றம்!

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும்…

1 hour ago

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா குறித்து அவதூறு.. சைபர் கிரைம் காவல் துறையில் புகார்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் அவதூறுகள்…

1 hour ago

‘ஓம்’ படத்தில் சாய் பல்லவி கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் மற்றும் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் நடிகை சாய்…

2 hours ago

14 ஆண்டுகால காதல்.. திருமண பந்தத்தில் இணைந்த அஞ்சனா அர்ஜுன் – இசயா நட்டர்!

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன், தனது 14 ஆண்டுகால காதலரான இசயா நட்டரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது…

2 hours ago

Mangala Vanname Video Song

Mangala Vanname Video Song | Ramayana | Namit M, Nitesh T | AR Rahman, Abhay…

2 days ago

Kannum Kannum Video Song

Kannum Kannum Video Song | Hello Kadhal | Arya | Nikhila Vimal | Nikhil Muraly…

2 days ago