இணையத்தில் கசிந்த ‘ராமாயணம்’ டிரைலர் – அதிர்ச்சியில் படக்குழு

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, அதிகாரப்பூர்வ டிரைலரை உடனடியாக வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்து வரும் இப்படம், இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் கடந்த 24-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்வதேச அளவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததைத் தொடர்ந்து டிரைலர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதாக தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா அறிவித்திருந்தார்.

இதனிடையே, புதுடெல்லியில் நடைபெற்ற ‘பிரதம் சங்கல்ப்’ நிகழ்ச்சி மற்றும் அமெரிக்காவின் சான் டியாகோ காமிக்-கான் நிகழ்வுகளில் திரையிடப்பட்ட டிரைலரின் சில காட்சிகள், செல்போனில் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன.

சுமார் 1 முதல் 2 நிமிடங்கள் வரையிலான இந்த வீடியோக்களில் ரன்பீர் கபூரின் ராமர் தோற்றம், சாய் பல்லவியின் உணர்வுப்பூர்வமான காட்சிகள், யாஷின் கம்பீரமான ராவணன் தோற்றம் மற்றும் பிரம்மாண்டமான VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

டிரைலர் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, இதுகுறித்த விவாதங்களும் சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளன. பல மாதங்களாக படக்குழுவினர் உழைத்து உருவாக்கிய காட்சிகளை அனுமதியின்றி பதிவு செய்து வெளியிடுவது தவறானது என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் கசிந்துவிட்டதால், உயர்தர அதிகாரப்பூர்வ டிரைலரை உடனடியாக வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக #RamayanaTrailerASAP என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

கசிந்த வீடியோக்களை நீக்குவதற்காக காப்பிரைட் ஸ்டிரைக் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணம்’ படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suresh

Recent Posts

காதலி மனைவியானாள்… மனைவி மர்மமான முறையில் கொலையானாள் – கணவனை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ‘கருப்பட்டி’

காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கான காரணத்தையும் பின்னணியில் இருக்கும் கொலையாளியையும் கணவன்…

52 minutes ago

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி: கொல்கத்தாவில் தொடங்கிய படப்பிடிப்பு!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்…

1 hour ago

‘தட்டிவிடாமல் என்னை தட்டிக் கொடுங்கள்’ – தேசிய விருது சர்ச்சைக்கு தனுஷ் பதில்!

72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது…

1 hour ago

ஜி.வி.பிரகாஷின் ‘இம்மார்டல்’ – இன்று வெளியாகும் 2-வது சிங்கிள்!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய திரைப்படம் ‘இம்மார்டல்’. இப்படத்தின் 2-வது சிங்கிளான ‘She…

2 hours ago

இன்று மாலை வெளியாகும் மகுடம் படத்தின் ‘கலங்காதே’ பாடல்!

நடிகர் விஷாலின் 35-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘மகுடம்’ படத்தின் அடுத்த பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. ‘மகுடம்’ படத்திற்கு…

2 hours ago

The Wedding Song Lyric Video

The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…

2 days ago