Kalangaadhe Song from Magudam to Release This Evening
நடிகர் விஷாலின் 35-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘மகுடம்’ படத்தின் அடுத்த பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.
‘மகுடம்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சௌத்ரி தயாரித்துள்ள இப்படம், அந்நிறுவனத்தின் 99-வது தயாரிப்பாகும். துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மூன்று விதமான கதாபாத்திரங்களில் விஷால் நடித்துள்ள இப்படத்தின் கதை கப்பல் மற்றும் துறைமுகத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முதலில் ‘ஈட்டி’, ‘ஐங்கரன்’ படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் படத்தில் இருந்து விலகிய நிலையில், விஷாலே இப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றன.
இந்நிலையில், ‘மகுடம்’ படத்தின் புதிய பாடலான ‘கலங்காதே’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும், ‘மகுடம்’ திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஷால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கான காரணத்தையும் பின்னணியில் இருக்கும் கொலையாளியையும் கணவன்…
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய திரைப்படம் ‘இம்மார்டல்’. இப்படத்தின் 2-வது சிங்கிளான ‘She…
The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…