பொங்கல் ரிலீஸுக்கு தயாராகும் விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தக் கூட்டணியில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் தேசிய விருது பெற்ற நிலையில், மீண்டும் இருவரும் இணைந்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாகப் படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதியும் தெரிவித்திருந்தார்.

இதனால் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘பாக்கெட் நாவல்’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

Ameera Official Teaser

Ameera Official Teaser | Senthamizhan Seeman | RK Suresh | Anu Sithara | MS Bhaskar

2 hours ago

‘ஓம்’ பட விழாவில் அரசியல் பேசினாரா தனுஷ்? ரசிகர்கள் மத்தியில் சொன்ன கருத்து!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…

1 day ago

மீண்டும் சண்டியர் ஆக வருகிறார் கமல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

1 day ago

மீண்டும் நடிக்க வருகிறாரா முதலமைச்சர் விஜய்..? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி,…

1 day ago

ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம்… தனுஷ் வெளியிட்ட உருக்கமான பதிவு!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…

1 day ago

சீன் திரை விமர்சனம்

நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ எனத் தொடர்ந்து இரண்டு படங்கள்…

1 day ago