Even the sky has limits...but friendship doesn't: Nayanthara-Trisha's post goes viral
வானுக்கும் எல்லை உண்டு..நட்புக்கு இல்லையே: வைரலாகும் நயன் தாரா- திரிஷா பதிவு
நாங்க திக் ஃபிரண்ட்ஸ் என நயனும் திரிஷாவும் மகிழ்ந்துள்ளனர். இது பற்றிய தகவல் பார்ப்போம்..
நயன்தாராவும், திரிஷாவும் சேர்ந்து எடுத்த புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அஜித்தின் ரேஸ் கிளப்பிற்கு சென்றனர். துபாயில் நடைபெற்று வரும் இந்த கார் ரேஸ் போட்டிக்கு நேரில் சென்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் அஜித்தை சந்தித்து உரையாடிய காட்சிகள் வைரலானது.
இந்நிலையில், நயன்தாராவும் திரிஷாவும் படகு ஒன்றில் ஒன்றாக அமர்ந்தபடி எடுத்த புகைப்படத்தை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். ‘முஸ்தபா முஸ்தபா’ பாடலுடன் நயன்தாரா-திரிஷா வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் இருவரது ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.
சினிமாத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளாக இருந்து வரும் நயன்தாரா மற்றும் திரிஷா இடையே பனிப்போர் நிலவி வருவதாக சினிமா வட்டாரங்களில் அவ்வப்போது கூறப்பட்டாலும், தாங்கள் இருவரும் நல்ல நட்பிலேயே இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில், ‘வானுக்கும் எல்லை உண்டு, நட்புக்கு இல்லையே’ என்ற வரிகளுடன் அவர்கள் பதிவிட்டுள்ள இந்த பதிவு, 15 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை தற்போது வரை பெற்றுள்ளது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…