பிரபல இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். 73 வயதில் அவர் மறைந்தது திரையுலகினரையும், அரசியல் தலைவர்களையும், ரசிகர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.
அவரது உடலுக்கு ஏராளமான திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், பின்னர் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இருந்தாலும், பாக்யராஜின் மறைவு ஏற்படுத்திய சோகம் இன்னும் நீங்காமல் உள்ளது.
இந்த நிலையில், பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு, தனது தந்தையின் நினைவாக மனதை உருக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பாக்யராஜ் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் அவர் பேசிய காட்சிகளை “முடிந்தால் மட்டும்…” என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சாந்தனு, “என்னால் முடிந்திருந்தால், என் வாழ்க்கையில் இருந்து 10 ஆண்டுகளை எடுத்து என் அப்பாவுக்கு கொடுத்திருப்பேன். அப்படி இருந்திருந்தால் அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, ரசிகர்களுக்கு மேலும் ஏராளமான திரைப்படங்களையும் கதைகளையும் கொடுத்திருப்பார். ஒரு ரசிகனாகவும், அவரிடம் கற்றுக்கொள்ளும் ஒருவராகவும், இன்னும் நிறைய விஷயங்களை அவரிடமிருந்து கற்றிருக்கலாம் என்பதுதான் என் ஆசை,” என்று உருக்கமாக பேசியுள்ளார்.
சாந்தனுவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது பதிவில் இரங்கல் தெரிவித்து, இந்த கடினமான நேரத்தில் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்று ஆறுதல் கூறி வருகின்றனர்.
Only if I could 😢
Appa 💔 pic.twitter.com/ZQOva2A5lR— Shanthnu (@imKBRshanthnu) June 28, 2026

