Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

Seeman Joins Sivakarthikeyan’s Seyon Produced by Kamal Haasan

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ஆர். மகேந்திரனுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ‘அமரன்’ படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘சேயோன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘சேயோன்’ படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீமான் இடம்பெறும் காட்சிகள் அடங்கிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயனுடன் சீமான் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.