Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எனக்கு சென்னை ரொம்ப பிடிக்கும்.. ரன்வீர் கபூர் பேச்சு

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ரன்பீ கபூர் பேசியதாவது, மீண்டும் சென்னையில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. நான் இங்கு ஷூட் செய்திருக்கிறேன். எனக்கு சென்னை ரொம்ப பிடிக்கும். இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே சந்தீப் இது ரீமேக் இல்லை இது ஒரிஜினல் ஆனால் மிக இண்டென்ஸான படம் என்றார். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதாபாத்திரத்திற்கு தயாராவார்கள் என்னைப் பொறுத்தவரை நான் இயக்குனரோடு அதிக நேரம் செலவிடுவேன்.

இயக்குனருக்கும் எனக்கும் உள்ள புரிதல் தான் படம் நன்றாக வரக் காரணம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் சந்தீப் மிக ஓப்பனாக இருந்தார். அவரிடம் தெளிவான பார்வை இருந்தது. நான் சந்தித்ததில் மிக ஒரிஜினலான இயக்குனர்களில் ஒருவர். தாய்ப்பாசம் குறித்து நிறைய படம் வந்துள்ளது. ஆனால் தந்தைப்பாசம் பற்றி படம் அதிகம் வந்ததில்லை. எப்படி இந்தக்கதை? ஏன் இந்தக்கதை? என்று அவரிடம் கேட்டேன். ஒருவன் தான் பாசம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லை வரை செல்வான், அவனைக் கொண்டு செல்லும் அந்த புள்ளி எது, என்பதுதான் இந்தப்படம் என்றார். அதை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

அனிமல் எப்போதும் தங்கள் உள்ளுணர்வுப்படி செயல்படும் இந்த ஹீரோவும் அப்படித்தான். படம் பார்க்கும் போது, இந்த டைட்டில் பொருத்தமானது என்பதை உணர்வீர்கள். இப்போது பான் இந்திய படங்கள் வந்து கலக்குவது மகிழ்ச்சி. இங்கு ஜவான் ஓடுகிறது, இந்தியில் ஜெயிலர், விக்ரம் ஓடுகிறது. மொத்தமாக நாங்கள் எண்டர்டெயின் செய்ய தான் படம் எடுக்கிறோம் அதை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப்படத்தை டிசம்பர் 1 திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளியுங்கள் நன்றி என்று பேசினார்.

Ranbir Kapoor latest speech Viral
Ranbir Kapoor latest speech Viral