Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபாலி’ டீசர் வெளியானது!

Ranabaali Teaser Released

இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படம் ‘ரணபாலி’. 1876–1878 காலகட்டத்தில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கடும் பஞ்சம் மற்றும் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, காலனிய ஆட்சிக்கு எதிரான போராட்டம் மற்றும் எதிர்ப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, அவரது மனைவி மற்றும் போராட்டப் பயணத்தில் துணை நிற்கும் ஜெயம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய் – அதுல் இசையமைத்துள்ளனர். அர்னால்ட் வோஸ்லூ முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள ‘ரணபாலி’ திரைப்படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ‘ரணபாலி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் விஜய் தேவரகொண்டாவின் ஆக்ரோஷமான தோற்றமும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டக் காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.