தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ஆல்யா மானசா இரண்டாவது பிரசவத்திற்காக இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். இதனையடுத்து அர்ச்சனா வேடத்தில் நடித்து வந்தவரும் விலகிக் கொண்டார்.
இப்படியான நிலையில் நாயகனாக நடித்து வரும் சித்துவும் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் இந்த சீரியலில் இருந்து விரைவில் அவரும் விலகுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் இந்த சீரியலும் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என சொல்லப்படுகிறது.

Raja Rani 2 Serial Latest Update

