Nayanthara settles down where famous actresses live
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பாளராகி படங்களைச் சிறிய அளவில் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.
இதுவரைக்கும் ஐதராபாத், கொச்சி, சென்னை போன்ற இடங்களில் ஹோட்டல்களில் தங்கி படங்களில் நடித்து வந்தார் நயன்தாரா. இந்நிலையில், இருவரும் சென்னை போயஸ் கார்டனில் 4 பெட்ரூம் கொண்ட வீட்டில் குடியேற இருக்கிறார்கள். இதற்காகப் பல கோடி ரூபாய் கொடுத்து இந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள்.
ஏற்கனவே போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், தனுஷ், இயக்குனர் பாலா உள்ளிட்டோர் வீடுகள் கட்டியுள்ளனர். இப்போது நயன்தாரா தனது காதலருடன் அங்கு வசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குக் குடியேறிய பிறகு தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, கல்லீரல் நோய்களுக்கான முழுமையான சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய கல்லீரல்…
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து நடித்து…
பிரபல தென்னிந்திய நடிகை மீனா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூகக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப்…
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘துடக்கம்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.…
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக…
மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு…