சுந்தரவல்லி சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா கல்யாணத்துக்கு வரலனாலும் பரவாயில்லை என்று சொல்ல நீ இப்படி சொல்லக்கூடாது சுந்தரவல்லி சூர்யா சொல்லியிருந்தாலும் நீ பெயர் போட்டு இருக்கணும் என்று சொல்ல இப்ப கூட ஒன்னு பிரச்சனை இல்லை அவன் பெயர் மட்டும் போடணும்னு சொன்னா இந்த பத்திரிகை எல்லாத்தையும் டிஸ்போஸ் பண்ணிட்டு புதுசா அடிக்கலாம் ஆனா அவன் கூட பொண்டாட்டின்னு எக்ஸ்ட்ரா ஒரு பேர போட சொல்லுவான். அதை எல்லாம் என்னால் செய்ய முடியாது என்று சொல்லிவிடுகிறார். சூர்யா வீட்டுக்கு வந்தவுடன் சுந்தரவல்லி அண்ணன் பத்திரிக்கையில் பெயர் போட வேண்டாம் என்ற விஷயத்தைப் பற்றி பேசுகிறார். நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க இது உங்க பையனோட கல்யாணம் உங்க பேர மட்டும் போட்டுட்டு உங்க வைஃப் பேர் போடாம நீங்க பத்திரிகை அடிக்க சொல்லுவீங்களா என்று கேட்க அதுதான் பிரச்சனை இதை பத்தி உங்க தங்கச்சியை யோசித்துப் பார்க்கல என்று சொல்லுகிறார். நீ தானே இந்த கல்யாணத்தை பொறுப்பா நடத்தணும் என்று சொல்ல பேர் போடுறதுனால எதுவும் மாறாது நான் செய்ய வேண்டிய கடமையை கண்டிப்பாக செய்வேன் என்று சொல்லிவிட்டு கல்யாணத்தை கூப்பிட்டு கார் டிக்கியில் ஒரு பார்சல் இருக்கு எடுத்துட்டு வா என்று சொல்லுகிறார். என்னோட தங்கச்சி கல்யாணத்துக்கு நான் பத்திரிக்கை அடிச்சுருக்கேன் என்று எடுத்து கொடுக்கிறார். யாரும் படிக்காததால் இதை நான் எதிர்பார்த்தேன் என்று சொல்லி பத்திரிக்கையை படித்து காட்ட அதில் சுரேகாவின் திருமணத்திற்கு சூர்யாவும்,நந்தினி சூர்யாவும் அன்புடன் வரவேற்கிறோம் என்று இருப்பதை பார்த்து அனைவரும் கடுப்பாகின்றனர் டென்ஷன் எல்லாம் குறைஞ்ச பிறகு எடுத்து பாருங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

ரூமுக்கு வந்த சூர்யாவிடம் நந்தினி எதுக்காக இது மாதிரி போட்ட போட்டிக்கு எதுக்கு பத்திரிக்கை போடுறீங்க என்று கேட்கிறார். அவங்க பேர் போடலைன்னா நான் உங்க பொண்டாட்டி இல்லனா ஆயிடுமா என்று கேட்கிறார். இது வெறும் பெயர் மட்டுமல்ல ஒரு அங்கீகாரம் நான் உன்னோட அங்கீகாரத்திற்கும் செல்ஃப் ரெஸ்பெக்ட்க்கும் போராடுகிறேன் அதற்காகத்தான் எல்லாமே என்னைக்குமே உன்னோட தன்மானத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட நந்தினி அந்த பத்திரிக்கையை எடுத்துப் பார்த்து அதில் நந்தினி சூர்யா என இருப்பதை ரசித்துப் பார்க்கிறார். மறுபக்கம் ஹரிதா கோபமாக இருக்க, மாதவி சுரேகா வருகின்றனர். இவங்க பண்றது எல்லாமே ரொம்ப தப்பு இந்த உரிமையை அவனுக்கு யார் கொடுத்தது என்று கேட்கிறார். அவன் தங்கச்சி கல்யாணத்துக்கு செய்றேன்னு சொல்லுவான் என்று சொல்ல இது அவன் தங்கச்சி கல்யாணம் மட்டும் இல்லை என் அண்ணனோட கல்யாணமும் தான் என்று சொல்லுகிறார்.

இந்த பத்திரிக்கையை அவன் யாருக்கும் கொடுக்கக் கூடாது நான் கொடுக்கவும் விடமாட்டேன் என்று சொல்லுகிறார். சுரேகா அவன் ரொம்ப முரடன் பார்த்து கவனமாய் இரு என்று சொல்லுகிறார். நந்தினி சூர்யாவிடம் இந்த பத்திரிக்கையை கொடுப்பதற்கு குலசாமிக்கு வச்சு பூஜை பண்ணனும் என்று சொல்ல, அவ்வளவு தூரம் எல்லாம் போக முடியாது என்று சொல்ல, அப்படியெல்லாம் இல்ல சார் பூஜை ரூமில் வைத்து சாமி கும்பிடலாம் என்று சொல்லிவிட்டு நான் நைட் சாமிகிட்ட வச்சுட்டு காலைல எடுத்துட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லுகிறார். நம்ம இது மாதிரி போட்டோ எடுக்கல இப்படி எப்படி பண்ணிங்க என்று சொல்ல ஏ ஐ மூலமா பண்ண என்று சொல்ல நந்தினி புரியவில்லை என்று சொன்னவுடன் சூர்யா விளக்கமாக சொல்லுகிறார். உடனே நந்தினி பத்திரிக்கை பாக்ஸ் எடுத்துக் கொண்டு போய் பூஜை ரூமில் வைத்து சாமி கும்பிட்டு சென்று விடுகிறார். மறுநாள் காலையில் சுந்தரவல்லி யாருக்கெல்லாம் பத்திரிக்கை கொடுக்கணும் என்று சொல்லி எழுதி கொண்டிருக்கின்றனர். நந்தினி வெளியில் பெருக்க வர அந்த நேரம் பார்த்து நந்தினிக்கு சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் வர நந்தினி பதற்றத்துடன் ஓடி உள்ளே வந்து விடுகிறார் கையில டெஸ்ட் பேப்பர் வேற எடுத்துக்கிட்டு வர்றாரே என்று பயப்பட வாத்தியார் நேராக வீட்டுக்குள் வருகிறார்.

சூர்யா அவரை வரவேற்க நந்தினி பயத்தில் கிச்சனில் இருக்கிறார். உடனே குடும்பத்தினர் முன்னிலையில் அவரை வரவேற்று உட்கார வைக்கிறார். உடனே சூர்யா நந்தினியை கூப்பிட நந்தினிக்கு டெஸ்ட் வச்ச பேப்பர் திருத்தியாச்சு அத கொடுக்க தான் வந்தேன் என்று சொல்ல சூர்யாவிடம் கொடுக்க ஆர்வமாக பார்க்கிறார். அதில் 50 அவுட் ஆப் 50 இருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டு நந்தினி பாராட்டுகிறார். நந்தினியின் வாத்தியார் நந்தினியை பாராட்டி அனைவருக்கும் சாக்லேட் பாக்ஸ் எடுத்து கொடுக்க சுந்தரவள்ளி குடும்பத்தினரும் சென்று விடுகின்றனர். சூர்யா ரொம்ப சந்தோஷப்பட்டு வாத்தியாருக்கு சாக்லேட் கொடுக்க இந்த சாக்லேட்டை நான் சாப்பிட கூடாது இது நந்தினி எடுத்த உண்மையான மார்க் கிடையாது என்று ஒரிஜினல் பேப்பரை காட்ட அதில் 50 க்கு 6 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இந்த பொண்ணுக்கு எப்படி பாடம் நடத்தி பாஸ் பண்ண வைக்கப் போறேன் என்று சொல்லுகிறார். எதுக்கு பொய் சொன்னீங்க என்று கேட்க இந்த குடும்பத்தில் இருக்கிறவங்க நந்தினி படிப்பதை இதுக்கு மேல தடுக்க மாட்டாங்க அதனால தான் என்று சொல்கிறார். இவங்களுக்கு ஆன்லைன் கிளாஸ்ல சரிப்பட்டு வராது ஒன்னு இவங்க அங்க வரணும் இல்ல மானங்கெட்டாவது நான் இங்கே வந்து பாடம் எடுக்கணும் நீங்க தான் முடிவு பண்ணனும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட சூரியா நந்தினியை கூப்பிட்டு படிக்கவே கூடாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா என்று கேட்கிறார் நான் கண்டிப்பா நல்லா படிச்சிடுவேன் என்று சொல்ல சரி குலசாமி முன்னாடி பத்திரிக்கையை வச்ச எல்லாம் எடுத்துட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார்.

கல்யாணமும் நந்தினியும் வந்து பத்திரிக்கையை பார்க்க பூஜை ரூமில் பத்திரிக்கை இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். சூர்யா சார் இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவாரு என்று சொல்ல கல்யாணம் கண்டிப்பா இந்த வீட்ல இருக்குற யாரோ தான் இப்படி பண்ணி இருக்காங்க என்று சொல்லுகிறார். பத்திரிக்கை இல்லங்குற விஷயத்தை சொல்லித்தான் ஆக வேண்டும் கடவுள் பார்த்துப்பாரு விடு என்று சொல்லுகிறார். சூர்யா வந்து என்ன இவ்வளவு நேரம் என்று கேட்க நந்தினி பத்திரிகை காணாமல் போன விஷயத்தை சொல்ல அது எப்படி காணாமல் போகும் என்று கோபப்படுகிறார். எல்லாம் அந்த திருட்டு கும்பல் வேலையா தான் இருக்கும் என்று சொல்ல யாரு செஞ்சி இருப்பாங்க என்று நந்தினி கேட்க அமெரிக்காவிலிருந்து வந்த சூனியக்காரி தான் செஞ்சிருப்பாவா என்று அழைத்து வருகிறார். குடும்பத்தினர் உட்கார்ந்து கொண்டிருக்க நான் அடிச்சிட்டு வந்த இன்விடேஷனை யார் எடுத்தது ஒழுங்கா அந்த இடத்துல வச்சுட்டா உங்களுக்கு நல்லது என்று சொல்லுகிறார். எனக்கு வேற வேலை இல்லையா என்று சுந்தரவல்லி கோபப்பட இதை யார் செஞ்சி இருப்பாங்கன்னு எனக்கு தெரியும் என்று ஹரிதாவை பார்த்து பேசுகிறார். எனக்கு நான் அடிச்ச அதே இன்விடேஷன் தான் வேண்டும் யாரு திருட்டு வேலை பண்ணாங்களோ அவங்களே எடுத்துக்கிட்டு வந்து தரணும் உங்களுக்கு ஒரு மணி நேரம் டைம் கொடுக்கிறேன் அதுக்குள்ள பத்திரிக்கை வரலைனா இங்க நடக்கிறதே வேற மாதிரி இருக்கும் என்று சொல்லி வார்னிங் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் ஹரிதா நின்று கொண்டிருக்க மாதவி மற்றும் சுரேகா இருவரும் வந்து ஹரிதாவை பாராட்டுகின்றனர் நீங்க என்ன சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க பத்திரிக்கையை நீ தான எடுத்து வச்ச என்று கேட்க நான் எதுக்கு எடுத்து வைக்கணும் இந்த மாதிரி சில்லி வேலையெல்லாம் நான் செய்ய மாட்டேன் நான் நீங்க ரெண்டு பேரும் எடுத்து வச்சதா தான் நினைச்சேன் என்று சொல்ல அப்போ நீங்களும் வைக்கலனா வேற யாரு வச்சிருப்பா என்று யோசிக்க இவர்களின் பின்னால் ரஞ்சித் இருக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

jothika lakshu

Recent Posts

Cottage Teaser

Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar

3 days ago

Bindaas Lyric Video

Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…

3 days ago

Yaaridho Video Song

Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…

3 days ago

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

4 days ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

4 days ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

4 days ago