திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் தகவல்கள் பரவி வந்தன.
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து பலரும் என்னிடம் விளக்கம் கேட்டு வருகிறார்கள். இந்த வதந்திகளும் ஊகங்களும் ஒரு எல்லையைத் தாண்டியுள்ளதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.
எனது தாயாரின் ஆசியுடன், என் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூன் 11-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்சின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அரசியலில் களமிறங்குகிறாரா அல்லது வேறு முக்கிய முடிவை அறிவிக்கிறாரா என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.
Hi everyone, News about me contesting in Trichy East election has been circulating across various media platforms.
All my Media friends have been reaching out to me over phone and requesting to meet me asking for clarification. Since the speculation has grown to a point where I… pic.twitter.com/68ZyN6P0l9
— Raghava Lawrence (@offl_Lawrence) June 7, 2026

