தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் லலித் குமார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்திற்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் தயாரிப்பாளர் அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்து இருப்பதாக வலைப்பேச்சு அந்தணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
லியோ படத்திற்கு தமிழகத்தில் அதிகாலை காட்சி வேண்டுமெனக்கேட்டு அப்படத்தின் தயாரிப்பாளர் லலித் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தகவல்
— ValaiPechu Anthanan (@Anthanan_Offl) October 16, 2023

