Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

செப்டம்பர் 25-ல் திரைக்கு வருகிறது ‘லெனின் பாண்டியன்’!

Lenin Pandian Set for Theatrical Release on September 25

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’. டி.டி. பாலச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் கங்கை அமரன், ரோஜா, ஷ்ரிதா ராவ், ஜார்ஜ் மரியன், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மணல் கொள்ளையை எதிர்த்து போராடும் ஒரு காவல்துறை அதிகாரியின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில், ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.