'Jana Nayagan' to Release Uncut in UK Theatres
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இங்கிலாந்தில் எந்தவித வெட்டுகளும் இன்றி வெளியிடப்படவுள்ளதாக அந்நாட்டின் விநியோகஸ்தரான அகிம்சா என்டர்டெயின்மென்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “ஜூலை 24 முதல் இங்கிலாந்து திரையரங்குகளில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான (15+) வெட்டப்படாத பதிப்பாக ‘ஜன நாயகன்’ வெளியாகிறது. அனைத்து ஆக்ஷன் காட்சிகளும், மாஸ் தருணங்களும் முழுமையாக ரசிகர்களுக்காக திரையிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) இந்தப் படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. தணிக்கைச் சான்றிதழின்படி, படத்தின் மொத்த ஓட்ட நேரம் 183 நிமிடங்கள் 11 வினாடிகள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) ஆகும்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக தள்ளிப்போனது. தற்போது ஜூலை 9-ஆம் தேதி தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…