Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகையுடன் கோவிந்தாவின் நெருக்கம்… விவாகரத்து மனுவை வாபஸ் பெற்ற மனைவி!

Govinda’s Wife Withdraws Divorce Plea Amid His Rumoured Link-Up With Actress!

பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை கோமல் ராணியுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்படும் தகவல்கள் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹூஜா தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தாவிடம் இருந்து விவாகரத்து கோரி சுனிதா அஹூஜா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது அந்த மனுவை அவர் வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இனி கோவிந்தா சட்டத்துக்கு புறம்பாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சுனிதா அஹூஜாவின் சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோவிந்தா–சுனிதா அஹூஜா இடையேயான உறவு மற்றும் நடிகை கோமல் ராணி தொடர்பான விவகாரம் மீண்டும் பாலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது.