Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘ஜெயிலர் 2’ முதல் பாடல் வெளியானது!

Jailer 2 First Single ‘Ala Bolelo’ Released

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடலான ‘அல போலேலோ’ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தையும் நெல்சன் திலீப்குமாரே இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பை அனிருத் ரவிச்சந்தர் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அறிவித்தபடியே ‘அல போலேலோ’ பாடல் வெளியாகியுள்ளது. உற்சாகமான துள்ளல் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார். பாடலுக்கு அருண்ராஜா காமராஜ் வரிகளை எழுதியுள்ளார். பாடலின் நடனக் காட்சிகளில் நடிகை ஷம்னா காசிம் இடம்பெற்றுள்ளார்.

‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.