விஜய் ரசிகர்களுக்கு ‘நல்ல’ செய்தி – விரைவில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..?

விஜய் ரசிகர்களுக்கு ‘நல்ல’ செய்தி – விரைவில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..?

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும் தெரிவிக்கும் பதில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகுதான் என்பதாகவே இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த சென்சார் தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது.

படத்திற்கான சென்சார் வழக்கை ஜனநாயகன் படக்குழு வாபஸ் பெற முடிவெடுத்தது மட்டும் இல்லாமல், படத்தை சென்சார் குழு சொல்வதைப் போல மாற்றங்களை செய்யவும் தயாராக இருப்பதாக பேச்சுகள் எழுந்தது. இது மட்டும் இல்லாமல் ரிவைசிங் கமிட்டிக்கு செல்லவும் படக்குழு தயாராகி விட்டதாகவும். அதற்காக படக்குழு விண்ணப்பித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

படத்தை ரிவைசிங் கமிட்டி பார்ப்பதற்கே இன்னும் நேரம் ஒதுக்கவில்லையாம். அதாவது படத்தை இந்த வார இறுதியான இன்றும் நாளையும் ரிவைசிங் கமிட்டி தரப்பில் பார்த்து விடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர்களின் ரிவைசிங் பட்டியலிலேயே ஜன நாயகன் படம் இன்னும் இடம் பெறவில்லையாம். இது மட்டும் இல்லாமல், படத்தை இந்த தேதியில் தான் பார்க்க திட்டமிட்டுள்ளோம் என்று படக்குழுவினருக்கும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லையாம். இதனால் மொத்த படக்குழுவும் செம அப்செட்டில் இருக்கிறதாம்.

படம் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது அதற்கான வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வருகிறதாம். இந்த தகவல் தற்போது திரையுலகில் வேகமாக பரவி வருவதால் பிப்ரவரி மாதத்தில் மீதம் உள்ள வெள்ளிக்கிழமைகளில் படத்தை ரிலீஸ் செய்ய பரபரப்பாக தயார் ஆகி வருகிறார்களாம். ஏற்கனவே சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவான படமான தாய் கிழவி படம் ரிலீஸ்க்கு தயாரான நிலையில், மற்ற சின்ன படெஜ்ட் படங்களும் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறதாம். அதே நேரத்தில் விஜய் ரசிகர்களை ஆறுதல் படுத்தும் விதமாக வரும் 27ஆம் தேதி அவரது தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார் தயாரிப்பாளர் தாணு என்றும் கூறப்படுகிறது.

‘Good’ news for Vijay fans – ‘Jananayagan’ to release soon..?
dinesh kumar

Recent Posts

FLAG Trailer

FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G

17 hours ago

குழந்தையின் மொட்டை விழா.. மீண்டும் ஒன்றாக தோன்றிய மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…

20 hours ago

நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி.. விரைவில் வெளியாகிறதா ‘சதுரங்க வேட்டை 2’?

அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…

20 hours ago

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர் தேவன்.. திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்!

திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…

20 hours ago

27 வயதில் உயிரிழந்த பாலிவுட் நடிகை அனன்யா ராஜ்.. யார் இவர்?

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…

20 hours ago

பிரபல ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியர் 36 வயதில் திடீர் மரணம்!

‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…

20 hours ago