நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்.நீரிழிவு நோய் வந்தாலே உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. அப்படி நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பெர்ரி மற்றும் சிட்ரஸ் நிறைந்த பழங்களை சாப்பிடலாம். இது மட்டும் இல்லாமல் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அவகேடோ சாப்பிடும் போது உடல் எடையை குறைக்கவும், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் கிவி மற்றும் ஆப்பிள் பழம் சாப்பிடலாம்.எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

