Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முடிவுக்கு வரப்போகும் அன்பே வா சீரியல், ரசிகர்கள் ஷாக்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து சன் டிவி பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் ஏதாவது ஒரு சீரியல் முடிவுக்கு வருகிறது என்றால் அது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி விடுகிறது. சமீபத்தில் அருவி தொடர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து மேலும் ஒரு சீரியல் முடிய உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆமாம் அன்பே வா சீரியல் இந்த வாரத்துடன் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சீரியலின் இறுதி நாள் எபிசோட் வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அன்பே வா சீரியல் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

End Card to Anbe Vaa Serial Update
End Card to Anbe Vaa Serial Update