eeramana rojave serial promo update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக கேப்ரில்லா நடித்து வருகிறார். இந்த சீரியலில் காவ்யா கர்ப்பமான நிலையில் அது ஜீவாவுக்கு தெரிய வந்தது. இந்த விஷயத்தை ஜீவா வீட்டுக்கு சொல்ல வர காவ்யா தடுத்து நிறுத்தினார்.
இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் ரம்யாவின் அம்மா பார்த்திடம் காவ்யா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்ல அவர் காவ்யா என்கிட்ட சொல்லாமல் இருக்க மாட்டா என்று பதில் சொல்ல ஜீவா கிட்ட சொல்லி இருக்கா என்று கொளுத்தி போடுகிறார்.
ரூமுக்கு வரும் பார்த்தி காவ்யாவை உலுக்கி எடுத்து நீ கர்ப்பமா இருக்கியா என்று கேட்க அவர் ஆமாம் என்று சொல்ல பார்த்தி அதை எங்கிட்ட சொல்லாமல் ஜீவா கிட்ட சொல்லி இருக்க என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.
அந்த ப்ரோமோ வீடியோவில் இப்படியான காட்சிகள் இடம் பெற்றதை பார்த்த ரசிகர்கள் அடுத்த பாரதி கண்ணம்மா, தென்றல் வந்து என்னை தொடும் சீரியலா என கலாய்த்து வருகின்றனர்.
அடுத்து பார்த்திபன் சந்தேகத்தால் காவ்யா வீட்டை விட்டு கிளம்புவா இதான் நடக்கும் எனவும் சீரியலை கலாய்த்து வருகின்றனர்.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…