Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அர்ஜுன்தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ பட கதைக்களம் என்ன தெரியுமா?

Do you know the plot of the film 'Ghan City' starring Arjun Das?

அர்ஜுன்தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ பட கதைக்களம் என்ன தெரியுமா?

அஜித்தின் கலக்கலான நடிப்பில் வெளியான ‘குட் பேக் அக்லி’ படம் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பும் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் ஆதிக் மீண்டும் படம் இயக்கவுள்ளார்.

இச்சூழலில், அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிக்கும் படத்துக்கு ‘கான் சிட்டி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். யோகிபாபு, வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்பட பலர் இதில் நடிக்கின்றனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்குகிறார்.

ஷான் ரோல்டன் இசை அமைக்கும் இப்படத்துக்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

‘ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் எமோஷனல் பக்கத்தைக் காட்டும் படம் இது. முழுமையான பொழுதுபோக்கு படமான இதன் 80 சதவிகிதப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகிறது’ என படக்குழு குறிப்பிட்டு உள்ளது.

Do you know the plot of the film 'Ghan City' starring Arjun Das?
Do you know the plot of the film ‘Ghan City’ starring Arjun Das?