Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அரசியல் த்ரில்லராக உருவாகும் ‘கராத்தே பாபு’ படம் பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்..

Director updates on the political thriller 'Karate Babu'..

அரசியல் த்ரில்லராக உருவாகும் ‘கராத்தே பாபு’ படம் பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்..

‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் நடித்து வரும் படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்..

கணேஷ் கே.பாபு இயக்​கத்​தில் ரவி மோகன் நடித்து வரும் படம் ‘கரேத்தே பாபு. இதை, ஸ்கிரீன் சீன் மீடியா என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் சுந்​தர் ஆறு​முகம் தயாரிக்​கிறார். ‘அகிலன்’, ‘பிரதர்’ படங்​களுக்கு பிறகு மூன்​றாவது முறை​யாக ரவி மோக​னுடன் இந்​நிறு​வனம் இணைந்துள்​ளது.

சாம் சிஎஸ் இசை அமைக்​கிறார். எழில் அரசு ஒளிப்​ப​திவு செய்​கிறார். அரசி​யல் கதையை கொண்ட இந்​தப் படத்​தில், தமிழ்​நாடு காவல்​துறை முன்​னாள் தலைமை இயக்​குநர் சங்​கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகி​யாக அறி​முக​மாகிறார். கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்​கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படம் பற்​றிய பேசிய இயக்​குநர் கணேஷ் கே பாபு, ‘அரசி​யல்​வா​தி​கள் குறித்து எத்​தனையோ திரைப்​படங்​கள் வந்​திருந்​தா​லும் அவர்களின் தனிப்​பட்ட வாழ்க்​கை, உறவு​கள் மற்​றும் உணர்​வு​கள் குறித்து பெரி​தாக திரை​யில் பேசப்​பட​வில்​லை. இந்த திரைப்​படம் ஒரு சட்​டமன்ற உறுப்​பினரின் இன்​னொரு பக்​கம் குறித்து அலசுகிறது.

உணர்​வுப் பூர்​வ​மான அரசி​யல் த்ரில்​ல​ராக இது உரு​வாகி வருகிறது. தற்​போது போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடந்து வரு​கின்​றன’ என்று தெரி​வித்​தார். ரவி மோக​னின் 34-வது படமான இப்​படத்​தின் டீஸர் விரை​வில் வெளி​யாக இருக்​கிறது. இதன் டப்​பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Director updates on the political thriller 'Karate Babu'..
Director updates on the political thriller ‘Karate Babu’..