Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குனர் ஆர் மாதேஷ் அவர்களின் தாய் திடீர் மரணம்.

director r-madhesh-mother-passes-away

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த “முதல்வன்” படத்தின் இணை தயாரிப்பாளரும், விஜய் நடித்த ” மதுர” மற்றும் பிரசாந்த் நடித்த “சாக்லெட்” படத்தை தயாரித்தவருமான ஆர்.மாதேஷ் அவர்களின் தாயார் திருமதி. ராதா அம்மையார் ( வயது 91 )இன்று (15.07.2022) காலை 6 மணியளவில் சேலத்தில் காலமானார். இன்று மாலை 4. மணியளவில் அவரது உடல், சேலத்தில் காமராஜர் தெரு, எண் :- 69-ல் இல்லத்திலிருந்து புறப்பட்டு எருமாபாளையத்தில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

பிரபல இயக்குனர் ஆர் மாதேஷ் அவர்களின் தாயார் மரணம்.. திரையுலகினர் இரங்கல்
ஆர். மாதேஷ் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் துணை தலைவராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பிலிம்சேம்பரில் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

விஜயகாந்த் நடித்த “அரசாங்கம், ” விஜய் நடித்த “மதுர”, பிரபு – வினய் நடித்த “மிரட்டல், ” திரிஷா நடித்த “மோகினி” படங்களை இயக்கியவர். ரஜினிக்காக உருவான “கோச்சடையான்” படத்தில் கிரியேட்டிவ் டைரக்டராகவும் பணிபுரிந்தவர். விமல், ஸ்ரேயா நடிக்கும் ‘சண்டக்காரி” படத்தை இயக்கி வருகிறார் ஆர். மாதேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

director r-madhesh-mother-passes-away
director r-madhesh-mother-passes-away