Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“தேர்தலுக்கு முன் கூறிய விமர்சனங்களுக்கு வருந்துகிறேன்” – விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் சேரன்

Director Cheran congratulates Vijay

தவெக தலைவர் விஜய் நாளை தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், இயக்குநரும் நடிகருமான சேரன் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பதிவில் சேரன் கூறியதாவது:

“முதல் தேர்தலிலேயே மக்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய் அவர்களுக்கு, திரையுலகைச் சேர்ந்த ஒருவராக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வெற்றியில் எனக்கு மகிழ்ச்சியளிப்பது, தமிழ்நாட்டில் தற்போது வீசும் சுதந்திரக் காற்றுதான்.

பல ஆண்டுகளாக சில அரசியல் கட்சிகளின் பிடியில் சிக்கி தவித்த மக்களுக்கு இப்போது ஒரு இளைப்பாறும் சூழல் கிடைத்துள்ளது. அதற்காக உங்களுக்கு நன்றி. அதுவே எங்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி, வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித் தரும் என நம்புகிறேன். தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்திருந்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சேரனின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.