Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பு அப்டேட் – புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு!

DHARMAN 2nd Schedule Wrapped

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார்.

இந்நிலையில், ‘தர்மன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு புதிய வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த வீடியோவில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் வழக்கமான ஸ்டைலிலும் கம்பீரத்துடனும் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இப்படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடிக்கிறார். ‘பேட்ட’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்துடன் மீண்டும் இணையும் சிம்ரன், ‘பஞ்சதந்திரம்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’ படங்களுக்குப் பிறகு கமல்ஹாசனுடனும் மீண்டும் இணைந்துள்ளார்.

மேலும் ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மிஷ்கின் மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோரும் இப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

‘தர்மன்’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். அன்பறிவு சகோதரர்கள் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர்.

முதலில் இப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் படத்தில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அஷ்வத் மாரிமுத்து இயக்குநராக அறிவிக்கப்பட்டார். படத்தின் கதை மற்றும் இதர முக்கிய தகவல்கள் தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.