தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் கமிட் ஆகி வரும் நடிகர் தனுஷ் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதன்படி நடிகர் தனுஷ் வடசென்னை சார்ந்த கதை வம்சம் கொண்ட “ராயன்” என்னும் தலைப்பில் புதிய படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்தில் தனுஷிற்கு தங்கையாக துஷாரா விஜயன் நடிக்க, எஸ் ஜே சூர்யா, விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் புதிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனால் உற்சாகமடைந்த தனுஷ் ரசிகர்கள் இந்த தகவலை இணையத்தில் அதிக அளவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
#Raayan – @dhanushkraja's Next Direction will Begin From April Bankrolled by @sunpictures
– @officialdushara Plays as Dhanush's Sister.
– Film is About Three Brothers Who lives in Rayapuram.#Dhanush | #VishnuVishal | #Kalidasjayaram | #SJSuryah | #Dushara pic.twitter.com/ilGadqbLmU
— THUNDER CREATION (@CreationThunder) January 13, 2023

