‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலில் இருப்பதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமீபத்தில் மும்பை பாந்த்ராவில் உள்ள பிரபல உணவகத்திற்கு மிருணாள் தாகூர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனித்தனியாக வந்துசென்றனர். இருவரின் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவின.
இதற்கு சமூக வலைதளத்தில் பதிலளித்த மிருணாள் தாகூர், “நாங்கள் எங்கே ஒன்றாக இருக்கிறோம் என்று காட்டுங்கள்? அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை எப்படி உண்மை என நம்புகிறீர்கள்?” எனக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நாட்டில் பேசுவதற்கு முக்கியமான பல விஷயங்கள் இருப்பதாகவும், பயனுள்ள விஷயங்களில் கவனம் செலுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் மிருணாள் தாகூர், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ராக்கா’ படத்திலும் நடித்து வருகிறார். முன்னதாக தனுஷுடன் அவரை இணைத்து வெளியான வதந்திகளையும் அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

