தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனிய என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நேகா. வாணி ராணி உள்ளிட்ட சீரியல் மூலம் பிரபலமான இவருக்கு தற்போது மீண்டும் சன் டிவி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது குறித்த தகவல் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியாகி உள்ளது. ஆனால் எந்த சீரியல்? என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில் இது பற்றிய தகவல்களை எதிர்பார்க்கலாம்.
View this post on Instagram

