Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகை. இதுதான் காரணமா?

baakiyalakshmi serial fame-leaving-the-show

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் நடித்து வரும் எல்லோருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும் குறிப்பாக ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ்க்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

காரணம் தன்னுடைய கணவர் செழியன் அம்மாவுக்கு ஆதரவாக இல்லை என்றாலும் தனது மாமியாருக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வருவதால் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இருந்த போதிலும் தற்போது தேடி வந்த ஹீரோயின் வாய்ப்பு காரணமாக இவர் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் ஒன்றில் நாயகியாக நடிக்க உள்ளாராம் திவ்யா கணேஷ். இந்த சீரியல் காரணமாக இவர் தற்போது இந்த சீரியலில் இருந்து வெளியேற போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் புதிய சீரியல் ஹீரோயின் என்றாலும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

baakiyalakshmi serial fame-leaving-the-show

baakiyalakshmi serial fame-leaving-the-show