Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகா கேட்ட கேள்வி,விளக்கம் கொடுத்த பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 21-03-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா கிச்சனில் இருக்க அங்கு வரும் ராதிகா உங்ககிட்ட ஒன்னு பேசணும் என்று சொல்லி உங்களுக்கு என்ன நிலைமை வந்துருச்சோ அதே நிலைமை தான் ஜெனிக்கு வந்து இருக்கு, அன்னைக்கு நீங்க விவாகரத்து வாங்கின மாதிரி ஜெனி இன்னைக்கு செழியன் கிட்ட விவாகரத்து கேக்குறதுக்கு என்ன தப்பு இருக்கு நீங்க ஜெனி பக்கம் தான் நிற்கணும் என சொல்கிறார்.

உடனே பாக்யா என்னுடைய வாழ்க்கையில் ஜெனியோட வாழ்க்கையில் கம்பேர் பண்ணாதீங்க ஜெனிக்கும் செழியனுக்கும் சந்தோஷமான விஷயங்கள் நிறைய இருக்கு. என்னுடைய வாழ்க்கையில அப்படி கிடையாது. செழியன் பண்ணுது தப்பு ஆனா அவர் எனக்கு பண்ணது துரோகம் உங்க கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும் என்று நான் நம்புறேன் என பாக்கியா அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.

அடுத்ததாக எழில், அமிர்தாவிடம் செழியன் பாக்கியா விஷயத்தில் ஏதாவது பண்ணனும். நான் வேணா ஜெனி கிட்ட பேசவா? நீயும் செழியனும் ஒரு முறை உட்கார்ந்து பேசி பாருங்கனு சொல்லுறேன் என்று சொல்ல எழில் ஜெனி பேசணுமே என்று சொல்கிறார்.

ஏற்கனவே கோர்ட்ல இருந்து அவங்க ரெண்டு பேரையும் கார்ல அனுப்பி வச்சேன் ஆனால் எதுவும் பேசின மாதிரியே தெரியல என்று சொல்கிறார். மறுநாள் காலையில் ஈஸ்வரி புரோக்கரை வரவைத்து செழியனுக்கு பொண்ணு பார்க்க சொல்ல பாக்கியா ஈஸ்வரியிடம் பேச வர அப்புறம் பேசிக்கலாம் என தடுத்து நிறுத்துகிறார்.

ப்ரோக்கர் கிளம்பிச் சென்றதை பாக்கியா இப்போ எதுக்கு கல்யாணம் என்று சொல்ல, ஈஸ்வரி செழியனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று கூறுகிறார். செழியன் நான் என்னுடைய கல்யாணத்தைப் பற்றி நினைத்து கூட பார்க்கல என்று சொல்ல ஈஸ்வரி தனது முடிவில் உறுதியாக இருக்க செழியன் கோபமாக வெளியே கிளம்புகிறார்.

செழியன் காரில் வேகமாக போவதை பார்க்க எழில் அம்மாவுக்கு போன் போட்டு வீட்ல ஏதாவது பிரச்சனையா என கேட்க பாக்கியா நடந்த விஷயத்தை சொல்ல சரி நான் போய் பார்க்கிறேன் என எழில் ஃபோனை வைக்கிறார். அடுத்ததாக செழியன் மாலினி வீட்டில் கதவைத் தட்டி நான் உன்கிட்ட வந்து பேசணும் எனக்கு கல்யாணம் ஆகல நீ நான் உன்கிட்ட சொன்னேன் என கேள்வி மேல் கேள்வி கேட்க பின்னாடியே ஃபாலோ பண்ணி வந்த எழில் இங்கு நடக்கும் விஷயங்களை கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 21-03-24
baakiyalakshmi serial episode update 21-03-24