Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கிண்டலடித்த கோபி. பாக்கியா எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Episode Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் கோபி இதெல்லாம் நல்லா இல்ல நீ பாண்டிச்சேரிக்கு எதுக்கு போன என கேள்வி கேட்க நீங்க எதுக்கு போனீங்க அப்படின்னு நான் கேட்டனா? நீங்க மட்டும் என்னை எதுக்கு கேள்வி கேட்கறீங்க என பதிலடி கொடுக்கிறார்.

அதோடு சரி நீ சமைக்கப் போன ஓகே அந்த லாம்ப் போஸ்ட் பழனிச்சாமி எதுக்கு அங்க வந்தான்? நீங்க ரெண்டு பேரும் சிரிச்சு சிரிச்சு பேசுவதை பார்த்து எல்லாரும் ஒரு மாதிரி பார்த்தாங்க எல்லாரும் என்கிட்ட வந்து பாவமா கேள்வி கேட்டாங்க என்று சொல்ல யார் என்ன கேட்டாங்க என்று பாக்கியா கேட்க அதெல்லாம் சொல்ல முடியாது என்று கோபி சொல்ல சொல்ல முடியாதுன்னா சரி கிளம்புங்க என்று கூறுகிறார்.

அது எப்படி சொல்லாமல் இருக்க முடியும் எல்லாரும் இவங்க என்ன ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்பா என்று கேட்டார்கள் என கோபி பதில் சொல்ல யார் கேட்டாங்களோ அவங்கள எங்கிட்டயே வந்து கேட்க சொல்லுங்க நான் பதில் சொல்லிக்கிறேன் என்று பதிலடி கொடுக்கிறார். மேலும் கோபி என்ன புத்திசாலி மாதிரி பதில் சொல்றியா என்று கேட்க உங்களை பத்தி கூடத்தான் என்கிட்ட வந்து கேட்டாங்க என்று பாக்கியா சொல்ல என்ன கேட்டாங்க என்று கோபி கேட்கிறார்.

அவர் உங்களை விவாகரத்து பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரு அப்படி இருந்தும் எதுக்கு உங்க பின்னாடியே உங்களை பாலோ பண்ணிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காரு அவருக்கு வெக்கமே இல்லையா என்று கேட்டார்கள் என்று சொன்னதும் கோபி கடுப்பாகி யார் கேட்டது சொல்லு மூஞ்ச ஒடச்சிடுறேன் என்று கேட்க உங்ககிட்ட யார் கேட்டாங்களோ அவங்க தான் என்கிட்டயும் கேட்டாங்க, சரி நான் கேட்கிறேன் உங்களுக்கு வெக்கமே இல்லையா என கேட்டு பதிலடி கொடுக்கிறார் பாக்யா.

அதனைத் தொடர்ந்து ரோட்ல போற வரவங்களுக்கு எல்லாம் எனக்கு பதில் சொல்லணும்னு அவசியம் கிடையாது என்று சொல்ல அவங்களுக்கு சொல்லத் தேவையில்ல எனக்கு சொல்லு என்று கோபி கேட்க அதான் சொன்னேனே ரோட்ல போற வரவங்களுக்கு எல்லாம் பதில் சொல்லணும்னு அவசியம் கிடையாது என்று அவமானப்படுத்துகிறார். என்கிட்ட வந்து இவங்க கிட்ட பேசணும் அவங்க கிட்ட பேச கூடாதுன்னு அறிவுரை சொல்லாதீங்க அதுக்கான உரிமையும் தகுதியும் உங்களுக்கு கிடையாது என பாக்யா பதிலடி கொடுத்து நகர்கிறார்.

அதனைத் தொடர்ந்து ஆபீஸில் ராதிகா பாக்யாவை சொடக்கு போட்டு காபி எடுத்து வர சொல்லிட்டு வேலை வாங்கி பிறகு இன்னும் இரண்டே நாள் தான் இருக்கு அதுக்குள்ள பதினெட்டு லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துடுவீங்கனு எனக்கு நம்பிக்கை இல்லை என நக்கலா பேச டைம் இருக்கு, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் யார் ஜெயிக்கிறாங்க யார் தோக்கறாங்கன்னு பாக்கலாம் என்று பாக்கியா பதிலடி கொடுக்கிறார்.

பிறகு வீட்டுக்கு வந்து கையில் இருக்கும் பணங்களை கணக்கு பார்த்துக் கொண்டிருக்க 8 லட்சம் ரூபாய் தான் இருக்கிறது. கோபிக்கு கொடுக்க இன்னும் 10 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் கோபி இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு அதுக்குள்ள பணத்தை கொடுக்க முடியுமா? அப்படியே பதினெட்டு லட்சம் ரூபாய் பணம் இருந்தாலும் அதை முழுசா எண்ண தெரியுமா என கேட்டு ஏளனமாக பேசிக் கொண்டிருக்க அங்கு வரும் ராமமூர்த்தி கோபியை திட்டி இன்னும் இரண்டு நாள்ல உனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உன் முகத்தில் தூக்கி எறிய தான் போறா அதை எடுத்துக்கிட்டு வீட்டை விட்டு கிளம்ப பெட்டி படுக்கையை கட்டுற வேலைய பாரு என ஆவேசப்படுகிறார்‌. நீங்களுமா இன்னும் இவள நம்புறீங்க? அதெல்லாம் நடக்காது, இவங்க என்னமோ 18 ரூபாய் மாதிரி பேசிக்கிட்டு இருக்காங்க என கோபி மேலே செல்கிறார்.

அடுத்ததாக செழியன் லேட்டாக வந்ததும் ஜெனி என்ன இவ்வளவு நேரம் விட்டா ஆபீஸ்ல இருந்திருவ போல என பேசி ஆண்டிக்கு பணம் தேவைப்படுகிறது, அவங்கள பார்க்கும்போது கஷ்டமா இருக்கு என ஜெனி சொல்ல செழியன் யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Episode Update
Baakiyalakshmi Episode Update