ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. “அயலான்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘அயலான்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இதனை படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. ‘அயலான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Here we go✨ Unveiling you the voice of our cute cosmic friend: Actor #Siddharth????️
Who guessed it right?
Get ready for more updates from #Ayalaan#AyalaanFromPongal???? #AyalaanFromSankranti????#Ayalaan @Siva_Kartikeyan @TheAyalaan @arrahman @Ravikumar_Dir @Phantomfxstudio… pic.twitter.com/kbnVyaYEn1
— KJR Studios (@kjr_studios) December 13, 2023

