Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

14 ஆண்டுகால காதல்.. திருமண பந்தத்தில் இணைந்த அஞ்சனா அர்ஜுன் – இசயா நட்டர்!

Arjuns Daughter Anjana Arjun Marries Her 14 Year Love Isaya Nutter

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன், தனது 14 ஆண்டுகால காதலரான இசயா நட்டரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது காதலுக்கு இருவீட்டுப் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற கோமோ ஏரிக்கரையில் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதையடுத்து, கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணப் புகைப்படங்களை அஞ்சனா அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தங்களது காதல் பயணத்தைக் குறிப்பிடும் வகையில் ‘To Forever’ எனப் பதிவிட்டதுடன், 14 ஆண்டுகால காதலை நினைவுகூரும் விதமாக ‘#14yearslater’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வரும் நிலையில், திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன், தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார். இவர் பிரபல நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவைத் திருமணம் செய்துகொண்டார்.

மூத்த மகள் ஐஸ்வர்யாவைப் போலத் திரைத்துறையில் பயணிக்காமல், அஞ்சனா அர்ஜுன் ஃபேஷன் மற்றும் தொழில்முனைவில் ஆர்வம் செலுத்தி வருகிறார். சர்வதேச அளவில் கவனம் பெற்றுவரும் வடிவமைப்பாளர் கைப்பைகள் தயாரிக்கும் தனது சொந்த பிராண்டையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Anjana Arjun (@anj204)