நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர், ஆலியா பட்டுக்கு மிக அருகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதைக் கவனித்த ஆலியா பட்டின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர், அந்த ரசிகரை பிடித்து பின்னோக்கித் தள்ளியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் மெய்க்காப்பாளரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், பிரபலங்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக ரசிகர்கள் கூட்டத்தில் முண்டியடிப்பது குறித்தும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“பிரபலங்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக உங்கள் சுயமரியாதையை இழக்க வேண்டாம்” என்றும், “பிரபலங்களின் புகழுக்கு ரசிகர்கள்தான் முக்கிய காரணம். ரசிகர்கள் இல்லையென்றால் பிரபலங்கள் பூஜ்ஜியம்தான்” என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், ரசிகர் தள்ளிவிடப்பட்டபோது ஆலியா பட் அதைத் தடுக்காமல் காரை நோக்கிச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவரையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஆலியா பட்டின் மெய்க்காப்பாளரின் இந்தச் செயலால் ஏற்பட்ட சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

