Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சாய் பல்லவி!

Actress Sai Pallavi Offers Prayers at Tiruvannamalai Arunachaleswarar Temple

பிரபல நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோவிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

எளிமையான தோற்றத்தில் கோவிலுக்கு வந்த சாய் பல்லவி, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

சாய் பல்லவி கோவிலுக்கு வந்த தகவல் பரவியதும், அங்கு இருந்த பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை காண திரண்டனர். பலரும் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்து வரும் ‘ஓம்’ திரைப்படத்தின் முக்கிய காட்சிகள், கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாக படமாக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக, நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்து, கோ-பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.