Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு நமிதா சொன்ன சிம்பிள் பதில்.!!

actress namitha talk about jananayagan movie

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு நமிதா பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.

ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது இதனால் படக்குழு படத்தின் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அவர்களது கருத்து தெரிவித்து வரும் நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் போது நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமிதா அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.

ஜனநாயகன் படத்தை வெளியிடுவது தொடர்பாக சென்சார் போர்டு தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் அனைவரும் அந்த படத்தை எதிர்பார்ப்பதாகவும் நமிதா கூறியுள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress namitha talk about jananayagan movie